ஓம் சக்தி ஓம்

ஸுந்தரவதனி ஸுகுண மனோஹரி

மந்தாஹாஸ முக மதிவதனி

சந்தன குங்கும அலங்கார முடனே

தந்திடுவா யுந்தன் தரிசனமே

நந்திதேவருடன் முனிவரும் பணிய

ஆனந்த முடனே வந்திடுவாய்

வந்தனை செய்து மாயனயனுடன்

வகையாயுன் புகழ் பாடிடவே

தங்க சிலம்பு சலசலவென்றிட

தாண்டவமாடித் தனயன் மகிழ்ந்திட

பொங்குமானந்தமுடன் புவிமேல் விளங்கும்

மங்கள நாயகி மகிழ்வாய் வருவாய்

வேதங்கள் உன்னை வேண்டிப் பாடிட

விரும்பி ஸரஸ்வதி வீணை வாசித்திட

(ஸத்) ஆனந்தமான ஜோதிஸ்வரூபிணி

ராஜ ராஜேஷ்வரி சரணம் சரணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top