தேவி உன் பெயரை துர்க்கா ஸ்ரீதுர்க்கா
என்று நான் ஓதியவண்ணம்
ஆவியை விடுத்தால் ஏழையேன் என்னை
அணுகுமோ தீவினைக் கூட்டம்?
பாவமே நிறைந்த பாதகன் எனினும்
பைரவி, நின்திருப் பாதம்
மேவுவேன்; பிறவித்தளை மாற்றி
விடுதலை நல்குவாய் அன்றோ?
நின்னருட் பெயரின் உறுதியினாலே
நிந்தையும் கவலையும் நீங்கி
மன்னிய பிரம்ம பதத்தையும் அடையும்
வாய்ப்பினைப் பெற்று நான் உய்வேன்.
–‘அமுத மொழிகள்’