என்நெஞ்சே பயிர்செய்தல்

என்நெஞ்சே பயிர்செய்தல்

எவ்வாரென அறியாயோ?

உன்னுடைய வாழ்வாகிய

உயர் வயல்தான் இருக்கிறதே

அவ் வயல் உழுதே அரும்பாடு பட்டால்

பொன்னெனும் அறுவடை

புரிந்திடலாம் நிலம் மீதே

காளியன்னை திருப்பெயரால்

கனவேலி அமைத்திடுவாய்

நாளும்உன்றன் வாழ்க்கை வயல்

நற்பலனை நல்கிடவே

நீள்கூந்தல் அலைபாயும்

நிமலையாம் காளியின்

நாமமாம் வேலிபக்கம்

வன்காலன் அணுகானே (என் நெஞ்சே)

இத்தினமோ எத்தினமோ

இனிய உன்றன் வாழ்வுவயல்

இத்தரையில் உரிமையறும்

இடர் வேளை வந்து விடும்

எத்தகைய கனிதனை

எழிற்பலனை விழையாயோ

அத்தகைய விளைவுசெய்ய

அரியநெஞ்சே முனைந்திடுவாய் (என் நெஞ்சே)

குருஅளித்த இறைவனின்

பெரும் புனித நாமத்தால்

திருவிளங்கும் விதைவிதைத்துத்

தெளிந்தபக்தி நீர் பாய்ச்சி

அருமைமிகு பலனடைவாய்

அதுனக்குக் கடினமென்றால்

ராம் பிரசாதின் மகிமைமிகு

அரும்துணையைக் கூவிடுவாய்

–அமுதமொழிகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top