அன்னை சியாமாவின் அருள்நீல வண்ண
அரும்பதக் கமலத்தில் ஆழ்ந்ததென் மனவண்டு!
மன்னும் ஆசையெனும்
மலர்தனில் நிறைந்திருக்கும்
மதுவெனும் இன்பத்தேன்
மகிழ்சுவை யற்றதுவே!
மலர்ப்பதம் கருநிறமே! வண்டும் கருநிறமே!
மருவிடும் கருமையொடு
கருமையும் கலந்ததுவே!
ஐம்பூதத் தத்துவத்தே அடங்கிய நிறம் கண்டே
அதன்வெளித் தோற்றத்தில்
அகம் மிக மயங்கியதே!
நாடின சுக துக்கம் கூடின சமமெனவே!
நாள்பல காத்திருந்த நற்கமலா காந்தரின்
ஈடிலா மனத்தாசை இன்றுகைக் கூடியதே!
இன்பக் கடல்பொங்கி எழுந்திசை பாடியதே!
–‘அமுத மொழிகள்’