பார்வதி நாதா சிவா சிவா
பசுபதி நாமா சிவா சிவா
நீல கண்டனே சிவா சிவா
நெற்றிக்கண்ணனே சிவா சிவா (பார்வதி நாதா)
திங்களைத் தரித்தாய் சிவா சிவா
திரிபுரம் எரித்தாய் சிவா சிவா
கங்கை கொண்டாய் சிவா சிவா
கரியை உரித்தாய் சிவா சிவா (பார்வதி நாதா)
காலனை உதைத்தாய் சிவா சிவா
வேலனை ஈன்றாய் சிவா சிவா
ஆடிடும் நாதனே சிவா சிவா
அம்பல வாணனே சிவா சிவா (பார்வதி நாதா)