ஆடிடும் பெருமான்
நடனம் ஆடிடும் பெருமான்
ஆடாதாரை ஆட வைத்துத்
தானும் ஆடும் பெருமான் (ஆடிடும்)
சொல்லாதாரைச் சொல்ல வைத்து
சொல்லிசைக்கும் பெருமான் (ஆடிடும்)
பாடாதாரைப் பாட வைத்து
பாட்டிசைக்கும் பெருமான் (ஆடிடும்)
கூடாதாரைக் கூட வைத்து
கூத்தாடும் பெருமான் (ஆடிடும்)