தேவ தேவ சிவ சங்கர மங்கள
கங்காதரா ஹர நமோ நமோ
திருவடி தூக்கி நின்றாடிய பாதா
தேவி மணாளா நமோ நமோ
மான்மழுவேந்திய மணியே நான்மறை
வணங்கிடும் பரனே நமோ நமோ
ஆனந்த வடிவாய்த் தோன்றிய சுந்தர
ஞான குணாளா நமோ நமோ.
பாபவிமோசன பார்வதி ரமணா
பரமதயாளா நமோ நமோ
சிரமேல் கங்கையும் திங்களும் சூடிய
சின்மய நாதா நமோ நமோ.