துன்பமில்லாத நிலையே சக்தி
தூக்கமில்லா கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத்திருக்கும் எரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி
சோம்பல் கெடுக்கும் துணிவே சக்தி
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம்பழந்தன்னில் சுவையே சக்தி
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி
-பாரதியார்