இரட்ச இரட்ச ஜகன்

இரட்ச இரட்ச ஜகன் மாதா

ஸர்வ சக்தி ஜய துர்கா

மங்கள வாரம் சொல்லிடவேணும்

மங்கள கண்டிகை சுலோகம் – அதை

ஒன்பது வாரம் சொல்லுவதாலே

உமையவள் திருவருள் சேரும்

படைப்பவள் அவளே காப்பவள் அவளே

அழிப்பவள் அவளே சக்தி

அபயம் என்றவளை சரண் புகுந்தாலே

அடைக்கலம் அவளே சக்தி

ஜய ஜய சங்கரி கௌரி மனோஹரி

அபயம் அளித்தருள் அம்பிகை பைரவி

சிவ சிவ சங்கரி சக்தி மகேச்வரி

திருவருள் தருவாய் தேவி

கருணையில் கங்கை கண்ணனின் தங்கை

கடைக்கண் திறந்தால் போதும்

வருகிற யோகம் வளர்பிறையாகும்

அருள்மழை பொழிவாய் நாளும்

நீல நிறத்தோடு ஞானம் வளர்த்தவள்

காளிய நர்த்தினி சூலம் எடுத்தவள்

பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்

நாமம் சொன்னால் நன்மை தருபவள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top