ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்மாஸனேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஷ்வரி (ஸ்ரீ)
ஆகம வேத கலா மயரூபிணி
அகிலசராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி (ஸ்ரீ)
பலவிதமா யுனைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலக முழுதும் என தக முறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி (ஸ்ரீ)
உழன்று திரிந்த என்னை
உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன்
ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னூழ்க்
கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி(ஸ்ரீ)
துன்பப்புடத்திலிட்டுத்
தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயம் நீக்கிப்
பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன்
ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா
அகிலாண்டேஸ்வரி (ஸ்ரீ)
– அகஸ்தியர்