பூரணி புராதனி

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி

புராந்தகி த்ரியம்பகி எழில்

புங்கவி வளங்குசிவ சங்கரி சஹஸ்ரதள

புட்பமிசை வீற்றி ருக்கும்

நாரணி மனாதீத நாயகி குணாதீத

நாதாந்த சக்தி என்றுன்

நாமமே யுச்சரித் திடுமடியர் நாமமே

நானுச் சரிக்க வசமோ

ஆரணி சடைக்கடவு ளாரணி யெனப்புகழ

அகிலாண்ட கோடி யீன்ற

அன்னையே பின்னையுங் கன்னியென

மறைபேசும் ஆனந்த ரூப மயிலே

வாரணியு மிருகொங்கை மாதர் மகிழ்

கங்கைபுகழ் வளமருவு தேவை யரசே

வரைராச னுக்கிருகண் மணியா யுதித்தமலை

வளர்கா தலிப்பெ ணுமையே 

–தாயுமானவர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top