அன்னையே விழித்தெழு

அன்னையே விழித்தெழு,

அன்னையே விழித்தெழு!

மூலத்தில் உறங்கும் முதல்வீ விழித்தெழு!

நாள்பல கழிந்தன; நாயகீ, விழித்தெழு!

குலகுண்டலினீ நலத்தாய் விழித்தெழு!

பழகிய சாதனை பலன்நல் கிடவே

என்தலை நோக்கி இறைவீ செல்வாய்

ஆயிரம் இதழ்கள் அமைந்த தாமரை

ஆசனத் தமர்ந்த அருட்சிவனுடனே

இணைந்தொன்றாகிட இனிதே செல்வாய்!

சாற்றும் கமலச் சக்கரம் ஆறினைப்

பிளந்து செல்வாய் பேரருள் அன்னையே!

அறிவெனும் வடிவுறும் அன்னையே! நெஞ்சின்

ஏக்கம் நீக்குக இன்பத் தாயே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top