மந்திரம் ஆவது நீறு

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான்

                திருநீறே.

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீற புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான்

திருநீறே.

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு

சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பக்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top