அம்பலத்தரசே

அம்பலத்தரசே அருமருந்தே

ஆனந்தத் தேனே அருள்விருந்தே

பொது நடத்தரசே புண்ணியனே

புலவரெலாம் புகழ் கண்ணியனே.

சிவசிவ சிவசிவ சின்மய தேஜா

சிவ சுந்தர குஞ்சித நடராஜா

படன விவேக பரம்பர வேதா

நடன சபேச சிதம்பரநாதா.

ஹரி பிரம்மாதியர் தேடிய நாதா

ஹரஹர சிவசிவ ஆடிய பாதா

அம்பலவா சிவ மகாதேவா

அம்பலவா இங்கே வா வா வா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top