கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி
கப்பிய கரி முகனடி பேணி
கற்றிடும் அடியவர் புத்தியிலுறைபவர்
கற்பகம் என வினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன்
மற்பொருள் திரள் புய மத யானை
மத்தள வயிறினை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர் கொடு பணிவேனே
முத்தமிழடை வினை முற்படுகிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரி செய்த அச்சிவனுறைரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே