ஓங்காரப் பரம் பொருளே உமையவள் திருமகனே ஐயா ஐங்கரனே
ஐந்தெழுத்தின் முதல்வோனே
அம்மை அப்பனே உலகம் என்று
அவர்களை அறிவுடன் சுற்றி வந்து
தந்திரமாய் கனியதனை தயவுடன் பெற்றவனே
கண நாதா ஓம் கண நாதா
சிங்கார வேலனுக்கு சிறப்பூட்டும் மூத்தவனே
மங்காத புகழ் சேர்க்க கல்வியை தருபவனே
கண நாதா ஓம் கண நாதா
உன் பாதம் பணிந்து நின்றோம்
உளம் உருகி உடன் வருவாய்
சத்தியமாய் ஜயம் புரிய
நித்தியம் துணை வருவாய்
கண நாதா ஓம் கண நாதா