பிள்ளையார் பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார்

பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலே

அரசமரத்து நிழலிலே

வீற்றிருக்கும் பிள்ளையார்

வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

யானைமுகம் கொண்டவர்

ஐந்து கரங்கள் உடையவர்

பானை வயிறு படைத்தவர்
பக்தர் குறை தீர்ப்பவர்

மஞ்சளிலே செய்யினும்

மண்ணினாலே செய்யினும்

அஞ்செழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

அவல் பொரி கடலையும்

அரிசி மாவு கொழுக்கட்டையும்

கவலையின்றி உண்ணுவார்
கஷ்டமெல்லாம் நீக்குவார்

கலியுகத்தின் விந்தையை

காணவேண்டி அனுதினம்

எலியின் மீது ஏறியே
இஷ்டம் போல சுற்றுவார்

ஆறுமுக வேலனுக்கு
அண்ணனான பிள்ளையார்

நேரும் துன்பம் யாவையும்
நீக்கி வைக்கும் பிள்ளையார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top