பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும்
அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும்
அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும்
அடியேன்
திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும்
அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்
கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும்
அடியேன்
ஆரூரன் ஆருரில் அம்மானுக் காளே