மனமே சொர்க்க

மனமே சொர்க்க இன்பத்தை

வழங்கும் அமுதை அருந்திடுவாய் !

இனிதே ஹரி ஹரி என்றபடி

அழுது தரைமேல் உருண்டிடுவாய் !

ஆழ்ந்த சிம்ம நாதம் போல

அமையும் ஹரிகோஷம்

சூழ்ந்து வான வெளியெல்லாமும்

நிரம்பிடும் ஹரி நாமம் ! (மனமே)

கைகள் தூக்கி நடமாடிக்

கானம் பாடி ஹரிநாமம்

வையக மாந்தர் யாவர்க்கும் வாரி

வழங்கி மகிழ் வுறுவாய் ! (மனமே)

ஹரியின் அன்புப் பெருங்கடலில் நீ

அல்லும் பகலும் நீந்திடுவாய் !

ஹரியின் பெயரால் ஆசைகள்

அழித்து வாழ்வில் இன்புறுவாய் ! (மனமே)

பிரேமைப் பித்தனாகி ஹரிஹரி

என்று ஏங்கி அழுதிடுவாய்

பரவசப் பித்தனாகி ஹரிஹரி

என்று ஏங்கி அழுதிடுவாய் ! 

–அமுதமொழிகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top