பச்சைமாமலை போல்

பச்சைமாமலை போல் மேனி

பவளவாய் கமலச்செங்கண்

அச்சுதா அமரர் ஏறே

ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிரயான் போய்

இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்க மாநகருளானே

ஊரிலேன் காணிஇல்லை

உறவு மற்றொருவர் இல்லை

பாரிலுன் பாத மூலம்

பற்றிலேன் பரமமூர்த்தி

காரொளி வண்ணனே

கண்ணனே கதறுகின்றேன்

ஆருளர்களைகண் அம்மா

அரங்கமா நகருளானே

கங்கைநீர் புனிதமாய

காவிரி நழுவு பாட்டு

பொங்கு நீர்பரந்துபாயும்

பூம்பொழில் அரங்கம் தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன்

கிடந்ததோர் கிடக்கை கண்டும்

எங்ஙனம் மறந்து வாழ்வேன்

ஏழையேன் ஏழையானேன் 

–தொண்டரடிப்பொடி ஆழ்வார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top