மூழ்குக நெஞ்சே ஆழ்ந்து செல்லுக,
அன்னை காளியின் அரும்பெயர் ஓதியே
அளப்பரும் இதய ஆழம் தனிலே
மறைந்தொளிர் விலையுயர் மணிபல காண்பாய்!
சிலமுறை மூழ்கி பலனில்லை என்றால்
அலைகடல் அடியில் மணியிலை எனாதே
தளரா உறுதியும் அடக்கமும் கொண்டு
ஆழ்ந்து மூழ்குக, அன்னை காளியின்
உறைவிடம் வரும்வரை தளராது செல்க!
ஞானமாம் கடல்தனில் நல்முத்து எத்தனையோ
ஊனமிலா அன்புடன் விதிப்படி முயன்றிடு
உனக்கவை கிடைப்பது நிச்சயம் ஆனால்
காமம் முதலாம் ஆறு முதலைகள்
அங்கே உண்டு ஆயினும் தளரேல்
தப்ப வழி உண்டு தவறாத விவேக
மஞ்சளைப் பூசினால் மறைந்திடும் பயமெலாம்.
கடலில் அடியில் கிடப்பன எண்ணிலா
முத்தும் பலப்பல ரத்தின மணிகளும்;
ராம பிரசாதன் நயமாய்க் கூறுவேன்
கொண்டு வா கைநிறை மணிகளை மூழ்கியே!
–‘அமுத மொழிகள்’