தேடியுனை சரணடைந்தேன்

தேடியுனை சரணடைந்தேன் தேசமுத்துமாரி

கேடதனை நீக்கிடுவாய்,

கேட்டவரந் தருவாய்

பாடியுனை சரணடைந்தேன்

பாசமெல்லாம் களைவாய்

கோடி நலம் செய்திடுவாய்

குறைகள் எல்லாம் தீர்ப்பாய்

எப்பொழுதுங் கவலையிலே

இணைங்கி நிற்பான் பாவி,

ஒப்பியுனதேவல்செய்வேன்

உனதருளால் வாழ்வேன்

சக்தியென்று நேரமெல்லாந்

தமிழ்க்கவிதை பாடி,

பக்தியுடன் போற்றி நின்றால்

பயமனைத்தும் தீரும்

ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்

யாதானும்தொழில் செய்வோம்

யாதும் அவள்தொழிலாம்

துன்பம் இயற்கை என்னும்

சொல்லை மறந்திடுவோம்

இன்பமே வேண்டி நிற்போம்

யாவும் அவள் தருவாள்

நம்பினோர் கெடுவதில்லை

நான்கு மறை தீர்ப்பு

அம்பிகையை சரண் புகுந்தால்

அதிக வரம் பெறலாம்

-பாரதியார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top