சுத்தசக்தி சுத்தசக்தி சுத்தசக்தி ஓம்சிவம்
சுத்தசக்தி சுத்தசக்தி சுத்தசக்தி ஓம்சிவம்
சித்தியஞான தர்மசக்தி சாந்தசக்தி ஓம்சிவம்
சச்சிதானந் தாத்மசக்தி சர்வசக்தி ஓம்சிவம்
வேதசாஸ்த்ர சகலகலா வித்யாசக்தி ஓம்சிவம்
வீரதீர தைர்யசக்தி விஜயசக்தி ஓம்சிவம்
நாதகீத கானகலா நடனசக்தி ஓம்சிவம்
மஹாமந்த்ர யந்த்ர–தந்த்ர வச்யசக்தி ஓம்சிவம்
யோகபோக த்யாகசக்தி லோகசக்தி ஓம்சிவம்
அஷ்டலக்ஷ்மி ஞானவாணி
அமரசக்தி ஓம்சிவம்
குஞ்சிதபத அபயஹஸ்த வாஞ்சிதபல தாயகம்
குருபரசிவ ஹரஹர நடராஜ சுத்த சக்தி ஓம்
–சுத்தானந்த பாரதியார்