சரணம் ஜகஜனனி சத்ய தர்ம பாலினி !
வரதாபய காரிணி வர மந்த்ர ஸ்வருபிணி
தவளவஸ்த்ர தாரிணி தானவ சம்ஹாரிணி! (ச)
பாசாம்குச தாரணி பாசபந்த மோசனி
மஹிஷாசுர மர்த்தினி
ம்ருதுமஞ்சுள பாஷிணி ! (ச)
காஞ்சிபுரவாஸினி வாஞ்ச்சித பலதாயினி
கலிகல்மஷ நாஷிணி
கருணாம்ருத வர்ஷிணி ! (ச)