ஸதானந்தமயி காளி
மஹா காலனின் மனமோஹினி
நீயே ஆடி நீயே பாடி
நீயே தாளமும் போடுகின்றாய்.
ஆதி தேவி ஸனாதனி
ஆதி காரணி ஜோதி பூரணி
ஏதுமில்லா ஊழிக் காலத்தில்
எங்கு பெற்றாய் தலை–மாலையை? (ஸதா)
பேசச் செய்கின்றாய் பேசுகின்றோம்
ஆட்டுவிக்கின்றாய் ஆடுகின்றோம்
நீயே சாரதி நீயே சகலம்
நீ காட்டும் வழி செல்லுகின்றோம்
ஏதுமறியா பேதை உள்ளம்
எங்கெங்கோ தாவுகின்றது
போதும் உந்தன் பாராமுகம்
போற்றி நின்றோம் காப்பாய் நீயே (ஸதா)