எல்லாம் உந்தன் இச்சையம்மா

எல்லாம் உந்தன் இச்சையம்மா

இச்சாரூபி தாரா நீயே

உந்தன் கார்யம் நீயே செய்தால்

தானே செய்தான் என்பான் மூடன்!

சேற்றில் யானை வீழச்செய்வாய்

குன்றை முடவன் தாண்டச் செய்வாய்

பிரம்மபதத்தை அருள்பவளே

மாயையாலே மயக்குபவளே!

யந்திரம் நான் இயக்குகின்றாய்

எந்தன் உடலே உந்தன் இல்லம்

ரதமும் நானே சாரதி நீயே

ஓடுகின்றேன் ஓட்டியவாறே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top