அம்மா அன்பில் நானிருக்கேன்
எனக்கு ஒரு கவலையில்லை
உணவுடனே உடையும் தந்தே
கண்ணென எனைக் காக்கிறாள்
எல்லாப் பொறுப்பும் ஏற்கிறாள் (அம்மா)
சம்சாரக் கடலில் மூழ்கும் போதும்
சங்கடத்தில் தவிக்கும் போதும்
காரிருள் என்னை சூழும் போதும்
சலிக்காமல் காக்கிறாள் (எல்லா)
ஐம்புலனும் எதிரி ஆளும்
தம்வசமாய் என்னை இழுக்க
நெறிதவறி நான் தத்தளிக்க
கைப்பிடித்தென்னை காக்கிறாள் (எல்லா)
நான் அன்னையை மறந்தாலும்
அன்னையவள் என்னை மறப்பதில்லை
என் அன்பு முழுவதும் தாயிடமே
நானே அவள் அன்பு சேய் (அம்மா)