ஹர ஹர சங்கர ஸாம்பஸதாசிவ
தேவா மஹேசா–அரு
மாமறை போற்றிடும் சந்தரகலாதரா
பரனே உமேசா (ஹர ஹர)
தயா நாதகுரு மஹாதேவன் உனை
பணிந்தேன் சர்வேசா–திருத்
தாண்டவம் ஆடிய தாமரை பாதங்கள்
அருள்வாய் ஸபேஸா
மோஹன ரூபா தீனருக்கருள்வாய்
கருணை ப்ரகாசா (ஹர ஹர)
பரமத்யான சிவஞான பிரம்மனே
சிவனே அருள்வாய்
முப்புரம் வென்றிட நெற்றி விழிக்கணை
தொடுத்தாய் மஹேசா
செஞ்ஜடைநாதா திருவடி சரணம்
வரம் தருவாய் ஈசா (ஹர ஹர)