அருணாசல சிவ

அருணாசல சிவ அருணாசல சிவ

அருணாசல சிவ அருணாசலா

அருணாசல மென அகமே நினைப்பவர்

அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

அழகு சுந்தரம் போல் அகமும் நீயுமுற்ற

அபின்னமாய் இருப்போம் அருணாசலா

அகம் புகுந் தீர்த்துன் அககுகை சிறையாய்

அமர்வித்த தென் கொலல் அருணாசலா

ஆருக்காவெனை ஆண்டனை அகற்றிடில்

அகிலம் பழித்திடும் அருணாசலா.

இப்பழி தப்புனை ஏனினைப் பித்தா

இனியார் விடுவார் அருணாசலா

ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிவோய்

இதுவோ உனதருள் அருணாசலா.

உனையே மாற்றி ஓடாதுளத்தின்மேல்

உறுதியாய் இருப்பாய் அருணாசலா

ஊர்சுற் றுளம்விடா துனைக் கண் டடங்கிட

உன்னழ கைக்காட் டருணாசலா.

எனையழித் திப்போ தெனைக் கல வாவிதல்

இதுவோ ஆண்மை அருணாசலா

ஏனிந்த உறக்கம் எனைப் பிற ரிழுக்க

இதுவுனக் கழகோ அருணாசலா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top