பாலும் தேனும் பாகும் பருப்பும்
நாலும் கலந்து நான் தருவேன் ।
உன் கோயில் வருவேன் ஆடல் புனைவேன்
குறைகளை தீர்ப்பாய் கணபதியே ॥
பேழை வயிரும் பிறைப்போல் கோடும்
யானை முகமும் உடையவனே ।
உன் பாத சிலம்பின் நாதம் கொண்டு
வேதம் பயில்வோம் வித்தகனே ॥
அன்னை பிதாவை முன்னறி தெய்வம்
அறிந்திட செய்வாய் அரும்பொருளே ।
உன் ஞானப்பழத்தை நாங்கள் புசிக்க
தானம் தருவாய் ஐங்கரனே ॥