ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்
நாராயண ஓம் நம: சிவாய எனும்
சாரமான நல்ல தாரக மந்திரம்
நாரதர் வால்மீகி முனிவர் நவின்றது
ஆரமுதாய் அன்பர்க்கானந்தம் ஈன்றது
காமாதி கள்வரை கட்டுடன் ஒழிப்பது
நேம நிட்டையுள்ள நெஞ்சினில் செழிப்பது
பக்தி வைராக்யமும் பரந்த சமரசமும்
சுத்த சச்சிதானந்த சித்தியும் அளிப்பது
–சுத்தானந்த பாரதியார்