ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில்
பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாக்கக் குடம் நிறைக்கும்
வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்
நிறைந்தேலோ ரெம்பாவாய்
–திருப்பாவை