விண்ணும் மண்ணும்

விண்ணும் மண்ணும் தனியாளும்–எங்கள்

வீரைசக்தி நினதருளே–என்றன்

கண்ணுங் கருத்துமெனக் கொண்டு–அன்பு

கசிந்து கசிந்து கசிந்துருகி–நான்

பண்ணும் பூசனைகளெல்லாம்–வெறும்

பாலை வனத்திலிட்ட நீரோ?–உனக்

கெண்ணுஞ் சிந்தையொன் றிலையோ?–அறி

வில்லா தகிலமளிப் பாயோ?

தோளை வலியுடைய தாக்கி–உடற்

சோர்வும் பிணிபலவும் போக்கி–அரி

வாளைக் கொண்டுபிளந் தாலும்–கட்டு

மாறா வுடலுறுதி தந்து–சுடர்

நாளைக் கண்டதோர் மலர்போல்–ஒளி

நண்ணித் திகழுமுகந் தந்து–மத

வேளை வெல்லுமுறை கூறித்–தவ

மேன்மை கொடுத்தருளல் வேண்டும்

–பாரதியார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top