ஜய ஜய ஜய

ஜய ஜய ஜய சக்தி ஓம் ஜய ஜய ஜய சக்தி

ஜய ஜய என தினம் பாடி பணிந்தோம்

ஜகமெங்கும் அமைதியைத் தா

ஓம் ஸ்ரீ ஜய சக்தி

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க

தேவையெல்லாம் மறைய அம்மம்மா

தேவையெல்லாம் மறைய

பக்தி பெருகிட பாடி உருகிட

பணிப்பாய் அன்பிலெமை (ஓம் ஸ்ரீ)

இருளது போக மருளது அகல

ஈஸ்வரி பலம் அருள்வாய் அம்மம்மா

ஈஸ்வரி பலம் அருள்வாய்.

கரம் குவித்தோம் சரணம் அடைந்தோம்

கருணையுடன் அணைப்பாய்

(ஓம் ஸ்ரீ)

காசினியெங்கும் வேற்றுமை போக

கருத்தினில் அன்பருள்வாய் அம்மம்மா

கருத்தினில் அன்பருள்வாய்

சீருடன் வாழ காட்டிடு காட்சி

தேவியுன் அடைக்கலமே (ஓம் ஸ்ரீ)

அகங்கார இருளை அழித்ததில் ஞான

நல்லொளி தீபம் வைத்து அம்மம்மா

நல்லொளி தீபம் வைத்து

நின் தாள் வணங்கி ஆரதி செய்தோம்

ஜகமெங்கும் அமைதியைத் தா (ஓம் ஸ்ரீ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top