அன்னையின் அபய

அன்னையின் அபயத் திருவடியதனில்

என்னுயிர் வைத்தே, எய்தினேன் சரணம்

என்ன பயமினி எமனிடம் எனக்கு

சென்னியின் முடியில் தேவி காளியின்

உன்னத மந்திரம் அதனை முடிந்தேன்.

உலகச் சந்தையில் உடலினை விற்று

நலமிகு துர்க்கையின் நாமம் வாங்கினேன்

கல்பதருவாம் காளியின் பெயரை

உள் நெஞ்சம் அதனுள் உயிர்க்க நாட்டினேன்

எமன் வரும் தருணம் இதயம் திறந்து

அமைதியோடதை அவனிடம் காட்டுவேன்

தளர்விலா ஆறு பகைவர்கள் தம்மை

வெளியிலே தள்ளி விரட்டி அடித்தேன்

ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ துர்க்கா என்று

பயணம் வாழ்க்கைப் பரவையில் தொடங்க

ஏற்பாடனைத்தும் இங்கு யான் செய்து

காத்திருக்கின்றேன் காளியே வாழி 

–‘அமுத மொழிகள்’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top