பிரபோ, கணபதே

பிரபோ, கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடியாடி உந்தன்

சன்னிதி சரணடைந்தோமே

சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்

தந்தருள் சத்குரு நீயே (பிரபோ)

ஆதிமூல கணநாத கஜானன

அத்புத தவள சொரூபா

தேவ தேவ ஜய விஜய வினாயக

சின்மய பரசிவ தீபா (பிரபோ)

தேடித் தேடி எங்கோ ஓடுகின்றார் உன்னைத்

தேடிக் கண்டுகொள்ளலாமே(உள்ளே)

கோடி கோடி மதயானைகள் பணி செய்ய

குன்றென விளங்கும் பெம்மானே (பிரபோ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top