அகணித தாரா கணங்களின் நடுவே
ஆதி பராசக்தி ஆடுகின்றாள்
ஆதி சிவசக்தி ஆடுகின்றாள்
பிரம்ம சிவசக்தி ஆடுகின்றாள்
சகல சராசரத்தும் தங்கச் சிலம்பொலிக்க
ஜெகதீசுவரி அவள் ஆடுகின்றாள்
ஆதிபராசக்தி ஆடுகின்றாள்
ஆதிசிவசக்தி ஆடுகின்றாள்.
அயனென வருவாள் அகிலமும் படைப்பாள்
அரியென அளிப்பாள் அரனென அழிப்பாள்
அழிவிலிருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாய்
அகிலாண்டேசுவரி ஆடுகின்றாள்
ஆதிபராசக்தி ஆடுகின்றாள்.
அகில முழுதுமுள்ள ஆருயிர் இனங்களும்
ஆழப் பெருங்கடலில் வாழுயிர் இனங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி
அன்னபூர்ணேசுவரி ஆடுகின்றாள்
ஆதிபராசக்தி ஆடுகின்றாள்.