என்னவோர் இயந்திரம்

என்னவோர் இயந்திரம் என்தாய் நீ படைத்தாய்?

அன்னையே சியாமாவே அருட் காளி தேவியே!

எண் சாண் அளவாகும் இயந்திரத்துள் இருந்தே

என்னென்ன விந்தைகள்

அன்னை நீ நிகழ்த்துகின்றாய்!

இயந்திரத்தை நீயே இயக்கிட இயங்கிடுதே!

இயந்திரமோ அதனை இனிதறிதல் இலையே!

இயங்குதல் தானென்றே எண்ணுது இயந்திரமே!

இவ்விதம் எண்ணிடுதல் எத்தனை மதியீனம்!

இயந்திரத்தில் அன்னையை

எளிதில் கண்டுகொள்வோர்

இயந்திரமாக இனி இயங்கிட வேண்டாமே!

இதுவன்றிச் சிலபேர் இனிய பக்தியென்னும்

இசைக்கயிற்றால் தேவியை

இயந்திரத்திற்பிணிப்பார்!

–‘அமுதமொழிகள்’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top