அன்பே உருவாம் அன்னை

அன்பே உருவாம் அன்னை காளியை

அறிந்தவர் யாரோ உலகம் தனிலே

ஆறாம் வேத தரிசனம் எவையும்

அவளை விளக்கும் திறனற்றுளதே!

தன்மயக்களிப்பில் தனையே மறக்கும்

தவயோகியரின் உட்பொருள் அவளே

சாத்திரம் உரைத்திடும் தத்துவம் இதுவே

என்பதை நாமே நன்கு உணர்ந்திடுவோம்!

தன்னுடை நிகரிலா விருப்பம் தன்னால்

தானே ஆனாள் பிரபஞ்சம் எல்லாம்

சக்தியாம் அவள் தன் உதரம் தனிலே

அணுமுதல் அண்டம் வரை நிறைந்திடுமே!

என்னே! தாயின் இப்பெரும் மகிமை

இதை அறிந்திலையோ இன்னும் நீதான்!

–‘அமுதமொழிகள்’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top