ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பக்திசெய் பக்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்
ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞானதயாநிதி பாதம்