எங்குங் திருமேனி எங்குங் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குங் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டே
சிற்பெரும் சோதி சிவானந்த கூத்தனை
பொற்பதமாம் அந்த சுந்தர கூத்தனை
பொற்பறி கூத்தனை பொற்தில்லை கூத்தனை
அற்புத கூத்தனை யார் அறிவாரே